விளையாட்டு

உலகக்கோப்பை இறுதிப்போட்டி டிக்கெட் விலை 32 ஆயிரம் அமெரிக்க டொலராக உயர்வு:!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2026 பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து தொடரின் டிக்கெட் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 19, ஆம் திகதி நியூ ஜெர்சியின் மெட்லைஃப் (MetLife) மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டிக்கான சிறந்த இருக்கைகளின் விலையை பிபா (FIFA) நிறுவனம் மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது.

வியாழக்கிழமை நிலவரப்படி, ஒரு டிக்கெட்டின் விலை 32,970 அமெரிக்க டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிக்கெட் விலையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான நெல்லி போ (Nellie, bo.)மற்றும் ஃபிராங்க் பலோன் (Frank Ballon)ஆகியோர் பிபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவுக்கு (Gianni Infantino)கடிதம் எழுதியுள்ளனர்.

“டிக்கெட் விலையைத் தீர்மானிப்பதில் பிபா ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதாகவும், சாதாரண ரசிகர்கள் போட்டியைப் பார்ப்பதைக் கடினமாக்குவதாகவும்” அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை, ரசிகர்களுக்கு மற்றுமொரு சுமையாக, மெட்லைஃப் மைதானத்திற்குச் செல்வதற்கான நியூ ஜெர்சி போக்குவரத்து (NJ Transit) கட்டணம் 150 டொலர்களாகத் திட்டமிடப்பட்டு, பின்னர் 105 டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது சாதாரண நாட்களின் கட்டணத்தை விட (13 டொலர்கள்) பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்லைஃப் மைதானத்தில் இறுதிப்போட்டி உட்பட மொத்தம் 8 போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஜூன் 13 முதல் பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற முன்னணி அணிகளின் லீக் போட்டிகள் தொடங்கவுள்ளன.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker