விளையாட்டு

23 ஆண்டுகளின் பின்னர் ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி!

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள புதிய நிர்வாகத்தின் கீழான இலங்கை கிரிக்கெட் அணி, 23 ஆண்டுகளின் பின்னர் ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியுள்ளது.

மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் மழை காரணமாக கைவியடப்பட்டுள்ளது.

சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த போட்டி கைவிடப்பட்ட நிலையில் ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் பெற்ற 41 ஓட்டங்கள் வித்தியாசத்திலான வெற்றியின் மூலம் 1-0 என ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

நடுவர்கள் பலமுறை மைதானத்தைப் பரிசோதித்த போதிலும், மைதானப் பராமரிப்பாளர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், தலா 20 ஓவர்கள் கொண்ட போட்டியை ஆரம்பிப்பதற்காக
நிர்ணயிக்கப்பட்டிருந்தபோதும் இறுதியில் போட்டி கைவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த வெற்றியானது 23 ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது 2003 ஆம் ஆண்டுக்கு பின் கரீபியன் தீவுகளில் இலங்கை அணி ஒருநாள் தொடரை வெற்றி கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker