ஆலையடிவேம்பு

கருத்தரங்கு முறையானதாக நடைபெற்றதா? மக்கள் கேள்வி?

ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (18ஆம் திகதி) இவ் வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது.
இது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஆலோசனைக்கு அமைய சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் கே.நேசராஜா தலைமையில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சாலினி ஒருங்கிணைப்பில் இடம்பெற்றதாகவும்.
இந்த கருத்தரங்கில் வளவாளராக ஆர்.ரதீசன் என்பவர் கலந்து கொண்டதாகவும்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் தேசிய வலுவூட்டல் மாத நிகழ்வுகளுக்கு அமைய புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் அசுவெசும குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கான இலவசமான பயிற்சி கருத்தரங்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றதாக சமூக வலைதள பதிவு மூலம் அறிந்திருந்தோம்.
இது தொடர்பாக மக்கள் மத்தில் விமர்சனங்களும் மற்றும் சந்தேகங்களும் எழுந்திருந்தது மற்றும் கடந்த வருடமும் இது போன்று கருத்தரங்கு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
கல்விக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது நல்லது,
இவ்வாறு இருக்கையில் இது தொடர்பாக ஆராய்ந்த போது.
1. வளவாளரை எதன் அடிப்படையில், எவ்வாறு தெரிவு செய்தார்கள்?
பிரதேசத்திலேயே புலமைப்பரிசில் பரீட்சைக்கு கற்பிக்கின்ற சிறந்த முன்னணி ஆசிரியர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை விடைத்தாள் திருத்துவதற்கு செல்வார்கள் அனுபவம் அதிகம் அவர்கள் முழு நேர கற்பித்தலை செயற்பாடாக கொண்டவர்கள்.
இவ்வாறு பலர் இருக்க எதனால் இந்த வளவாளர் தெரிவு செய்யப்பட்டார்? ஏற்பாட்டாளர்களால் வளவாளர் தெரிவுக்கான நடைமுறை முறையாக பின்பற்றப்பட்டதா? என பல கேள்விகள் எழுவதாகவும் தெரிவித்திருந்தனர்.
02. மாணவர் தெரிவு எவ்வாறு அமைந்தது?
கருத்தரங்கில் அண்ணளவாக 45 மாணவர்கள் கலந்துகொண்டத்தை பார்க்கக்கூடியதாக இருந்தது.
பெரும்பாலான கதிரைகள் காலியாக இருந்தது. மாணவர்களின் பெற்றோர்களும் கதிரைகளை நிரப்பி இருந்தனர்.
மாணவர்களை எவ்வாறு அழைத்திருந்தார்கள் என ஆராய்ந்த போது,
குறித்த கருத்தரங்கு தொடர்பாக மாணவர்களின் சம்பந்தப்பட்ட பாடசாலை கல்வி அதிகாரி, அதிபர்கள் அல்லது பாடசாலை சமூகம் என எவருக்கும் தெரிவிக்கப்படவில்லை.
புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் அசுவெசும குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் வீடுகளுக்கு சமுத்தி அதிகாரி சென்று தெரிவித்தார்களாம், இதனில் தகுதியான பலருக்கு சொல்லப்படவில்லை எனவும் குற்றச்சாற்று காணப்படுகிறது.
மேலும் காணொளி ஒன்றினை பார்வையிடும் போது அசுவெசும பெற்றுக்கொள்ள தகுதியற்ற குடும்பங்களை சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.
எவ்வாறு வரையறை அற்று ஏற்பாட்டாளர்களுக்கு தெரிந்த உறவினர்களின் பிள்ளைகளை மாத்திரம் எவ்வாறு கலந்துகொள்ள அனுமதிக்கலாம்.
இது மற்ற மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும்.
மேலும் கருத்தரங்கு தொடர்பாக பாடசாலை சமூகத்திற்கு தெரியாது என்பதனால் பாடசாலை ஆசிரியர்களால் வழமையாக நடத்தப்படுகின்ற வகுப்புக்கள் அந்த நேரத்தில் நடைபெற்றிருக்கிறது.
எதிர்பார்த்த மாணவர்கள் வரவில்லை என்பது காலியான கதிரை எண்ணிக்கையில் தெரிகிறது.
இவ்வாறான பல விடயங்களை ஆராயும் போது, முறையாக தெரியப்படுத்தி பயனுள்ளதாக வினைத்திறனாக செயற்படுத்தி இருக்கலாம் எனவும் கருத்து தெரிவிக்கின்றார்கள்.
திட்டமிடல், தலைமைத்துவம், ஒருங்கிணைப்பு என்பன அற்ற நிகழ்வு எனவும் விமர்சனம் எழுகிறது.
இது தொடர்பாக எமது செய்திப்பிரிவு திருக்கோவில் கல்வி வலய ஆரம்ப பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியிடம் வினாவிய போது சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த கருத்தரங்கு தொடர்பாக எங்களுக்கு தெரிவிக்கவில்லை எனவும்,
சனிக்கிழமை தினமாக இருந்தாலும் கருத்தரங்குக்கு மாணவர்களை அழைக்கும் போது அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மக்களிடம் இருந்து எழுத்து மூலமாக முறைப்பாடு வந்தால் முறையாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் இது தொடர்பாக கருத்தரங்கு ஏற்பாட்டாளர்கள் பக்க நியாயத்தையும் அவர்கள் கருத்துக்களையும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கேட்டபோது,
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் தேசிய வலுவூட்டல் மாத நிகழ்வுக்காக குறைந்த அளவு நிதியே கிடைக்கப்பெற்றதாகவும் அதனால் மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களை கொண்டதாக கருத்தரங்கு இடம்பெற்றதாகவும்.
சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச எல்லா பகுதிகளிலும் இருந்து புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் அசுவெசும குடும்பங்களை சேர்ந்த மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட ஒரு சில மாணவர்களை மாத்திரம் கருத்தரங்கில் கலந்துகொள்ள தெரியப்படுத்துங்கள் என அறிவுறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
வேறு ஏதும் குறைங்கள் இருந்தால் ஆராய்வதாகவும்.
மேலும் வளவாளராக கடந்த வருடமும் இந்த வளவாளரே செயற்பட்டிருந்தார். அந்த வகையில் இவ் வருடமும் அவரை வளவாளராக பயன்படுத்திக்கொண்டோம் எனவும் தெரிவித்திருந்தார்.
– கிரிசாந் மகாதேவன் –

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker