ஆலையடிவேம்பு
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு NAFSO அமைப்பின் ஏற்பாட்டில் சிரமதானமும் மரநடுகை நிகழ்வும்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இயற்கையை பாதுகாப்போம் எதிர்காலத்தை காப்போம் எனும் நோக்குடன் NAFSO அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (05) கண்ணகி வித்தியாலயத்தில் சிரமதானமும் மரநடுகை நிகழ்வும் அம்பாரை மாவட்ட கள உத்தியோகத்தர் K.கோகுலன் (கண்ணன்) தலமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் பாடசாலையின் அதிபர் M. சண்டேஸ்வரன், ஆசிரியர்கள், திருமதி சுமதி சிவநாயகம் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர், NAFSO அமைப்பின் மாவட்ட இனைப்பாளர் திரு K.இஸ்ஸதீன் மற்றும் முன்னால் இளைஞர் அணி தலைவர் M.B.ஹக்கீம் அத்துடன் மாணவர்கள், இளைஞர் யுவதிகள், கிழக்கு சூரியன் பெண்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.



