இலங்கை

மெட்ரோ பேருந்து சேவைக்கு மேலும் 104 பேருந்துகள்!

ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட விஜயத்தை முன்னிட்டு இன்று மட்டக்களப்பில் இடம் பெற்ற “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்திட்ட நிகழ்வுகள்

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்கள் மற்றும் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப. தினேஸ் இணைப்பாக்கத்தில் காந்தி பூங்காவில் இன்று இடம் பெற்றன.

இவ் தேசிய செயற்திட்டத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள 57 பொலிஸ் நிலையங்களிலும் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

மேலும் “விற்கின்ற – அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்” – அகன்று செல்” எனும் வாசகத்தினை மையமாகக் கொண்ட துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு இதன் போது மக்களுக்கு வழங்கப்பட்டன.

மார்ச் மாதம் 01 முதல் “முழு நாடும் ஒன்றாக – தேசிய செயல்” திட்டத்துடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பொலிசாருடன் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் வழங்கப்பட்டன.

மேலும் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் கொண்ட ஸ்டிக்கர்கள் பேருந்துகள், முற்சக்கர வாகனங்களில் அதிகளினால் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker