இலங்கை
அக்கரைப்பற்று செலிங்கோ லைப் கிளையில் பெமிலி சவாரி சீட்டிழுப்பு வெற்றியாளர்க்கு தங்க நாணயம் வழங்கும் நிகழ்வு….

-செல்வி வினாயகமூர்த்தி-
இலங்கையில் இயங்கும் ஆயுள்காப்புறுதி நிறுவனமான செலிங்கோ லைப் (Ceylinco Life) நிறுவனத்தின் 14 வது பெமிலி சவாரி சீட்டிழுப்பில் வெற்றியாளராக தெரிவுசெய்யப்பட்ட (எஸ்.விஜயஸ்ரீகாந்தன் தம்பிலுவில்) செலிங்கோ லைவ் வாடிக்கையாளருக்கு இன்று (26) வெள்ளிக்கிழமை ஐம்பதாயிரம் (50000/-) பெறுமதியான தங்க நாணயம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் செலிங்கோ லைப் இன் பிராந்திய முகாமையாளர் எஸ் வேணுகரன் வெற்றியாளருக்கான தங்க நாணயத்தை வழங்கி வைத்ததுடன் அக்கரைப்பற்று செலிங்கோலைப் கிளைமுகாமையாளர் ஆர் .சுதர்ஷன் மற்றும் செல்வி இ.பதுர்ஷனா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.