ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய மாணவர்கள் சதுரங்க போட்டிகளில் பிரகாசிப்பு….

இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளத்தினால் 2026.06.06 மற்றும் 07ஆம் திகதிகளில் சதுரங்க போட்டிகள் கல்முனை கார்மல் பற்றிமா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
குறித்த போட்டியில் அக்கரைப்பற்று திகோ/இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய மாணவர்கள் கல்முனை கல்வி மாவட்ட பிரிவில் இடம்பெற்ற 18 வயதுக்கு கீழ்ப்பட்ட போட்டியில் சம்பியனாக S.பிரஜித் மற்றும் மூன்றாம் இடமாக R.தனுஸ்காந்தும் 14 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவில் 4ம் இடத்தினை M.கோபினாஸ் என்பவரும் வெற்றியீட்டினர்.
இவர்களுக்கான வெற்றி சான்றிதழ் மற்றும் பதக்கம் என்பன அதிபரினாலும் உடற்கல்வி ஆசிரியர் நியாஸ் அவர்களினாலும் நேற்றைய தினம் (09) வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.



