ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று JOLLYBOYS SPORTS CLUB விநாயகபுரம் மண்ணில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.

அக்கரைப்பற்று JOLLYBOYS SPORTS CLUB கடந்த 26 ஆம் திகதி விநாயகபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற மின்னொலி T20 Championship போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.
சாம்பியன்ஸ் டிரோபியை வென்றதுடன் ரூ.100,000/- பணப் பரிசையும் பெற்றிருக்கிறார்கள்.
Jolly Boys Sports Club அணியினர் வெற்றியை பெற்று அக்கரைப்பற்று பிரதேசம் வருகைதந்தவுடன் ஆலையடிவேம்பு பிரதேச சபையினர் நடாத்திய சித்திரை விளையாட்டுப் போட்டி நிகழ்வில் மேடையேற்றி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்தி கௌரவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



