உலகம்

விமான வரலாற்றிலேயே இப்படி ஒரு மோசடியா?

விமான ஓட்டுநர் உரிமம் ஏதுமின்றி, 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதம விமானியாகப் பணியாற்றிய ஒருவரைக் கனடா நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், இவர் கனடாவிற்குள் உள்நாட்டு வான்பயணங்கள் உட்பட 900க்கும் அதிகமான வான்பயணங்களை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, குறிப்பிட்ட இந்த காலப்பகுதியில் வர்த்தக விமானங்களை இயக்குவதற்கான முறையான உரிமமோ அல்லது சரக்கு போக்குவரத்து விமானங்களை இயக்குவதற்கான செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரமோ இவரிடம் இருந்திருக்கவில்லை என அந்நாட்டுப் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இத்தகவல் வெளிவந்ததை அடுத்து, உடனடியாகச் செயற்பட்ட அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் அக்குறிப்பிட்ட நபரின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், ஆயிரக்கணக்கான விமானப் பயணிகளின் உயிர்களை ஆபத்துக்குள்ளாக்கியமை தொடர்பாக அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker