சமூக சிற்பிகள் அமைப்பின் சேவை வழங்குனர்களுடனான ஒருங்கிணைப்பு கலந்துரையாடல்….

சமூக சிற்பிகள் அமைப்பானது அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 2015ம் ஆண்டியில் இருந்து பெண்கள் சிறுவர்கள் தொடர்பான உதவிகளையும், செயற்திட்டங்களையும் செயற்பாடுகள் தொடர்பில் இலவச சட்ட சேவைகளையும் வழங்கிவருகின்றது.
குறித்த அமைப்பின் ஆற்றுப்படுத்தல் மற்றும் சேவைகளை மேலும் விருத்தி செய்து கொள்ளும் வகையில் ஏனைய அரச, மற்றும் சமூக ஆர்வலர்களின் பங்கேற்புடனான கலந்துரையாடல் நிகழ்வு சமூக சிற்பிகள் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் N.நிஷாந்தி தலைமையில் இன்றைய தினம் (23) காலை 10.00 மணியளவில் அக்கரைப்பற்று 8/3 சமூக சிற்பிகள் அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இவ் ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் மூலமாக சுற்றுப்புற கிராமங்களில் காணப்படும் சமூக பிரச்சினைகள் மற்றும் மனித உரிமை தொடர்பான பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கான தீர்வுகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்குவதற்கும் பக்கபலமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் இன்றைய ஒன்றுகூடலில் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட வீரமுனையை சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவருக்கு அண்மையில் ஆலய திருவிழா நிகழ்வொன்றில் இரண்டு இளைஞர்களால் ஏற்பட்ட துன்புறுத்தல் துஸ்பிரயோகம் அதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகளினால் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டனவா? என்பது தொடர்பாக ஆராயப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு ஆதரவாக சட்ட உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் சமூக சிற்பிகள் அமைப்பினால் கடந்தகாலங்களில் செயற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் அதைத்தொடந்து சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படுகின்ற வன்முறைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டிருந்தது.
இக் கலந்துரையாடலில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், ஆற்றுப்படுத்தல் உத்தியோகத்தர், சமூக ஆர்வலகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளும் வழங்கி இருந்தார்கள்.



