கட்டாக்காலி மாடுகளால் பிரதேச மக்கள் தொடர்ந்தும் பெரிதும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக விசனம்: அதிகாரமிக்க எவருமே கண்டுகொள்வதாக தெரியவில்லை?

ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கட்டாக்காலி மாடுகள் இரவு பகல் என வீதியிலேயே நடமாடி திரிவதால் பாதைகளில் பயணம் மேற்கொள்வோருக்கு விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலையும் மேலும் மக்களுக்கு அசௌகரியமும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.
பலமுறை இது தொடர்பாக மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் அதிகாரம் மிக்க ஆலையடிவேம்பு பிரதேச சபையினரை மேற்கோள் காட்டி பலமுறை செய்திகளை பதிவிட்டு வெளிப்படுத்திய போதிலும்.
இது தொடர்பாக தொடர்ச்சியாக எவரும் கண்டுகொள்ளாத நிலை மற்றும் அசமந்த போக்கு பெரிதும் காணப்படுகிறது.
ஆலையடிவேம்பு பிரதேசசபையினர் வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பல முறை வெளிப்படுத்திய போதிலும் அதற்காக முழு மனதுடன் எந்த செயற்பாடுகளையும் வினைத்திறனாக மேற்கொள்ளவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கிறார்கள்.
மாடுகளை கட்டாகாலியாக வீதிகளில் விடுவது என்பது மிகவும் ஆபத்தான செயற்பாடாகும்.
கட்டாக்காலி மாடுகள் இரவு பகல் என முழுவதுமாக பிரதேசத்தில் அதிகமாக காணக்கூடியதாக உள்ளது.
அடுத்த விபத்து ஏற்படும் முன்னர் மாடுகளின் உரிமையாளர்கள் தங்களது மாடுகளை வீடுகளில் கட்டி வளர்த்து தங்களையும் பிறரையும் காக்க உதவுமாறு மீண்டும் உங்களிடம் வேண்டிக்கொள்கிறோம்.
மேலும் அதிகாரம் மிக்க சம்மந்தப்பட்டவர்களும் இதற்கு உடனடியான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இதனுடாக மீண்டும் வலியுறுத்துகின்றோம்.



