ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு நகர்ப்புற அபிவிருத்தித் திட்டத்தை (2026 – 2035) தயாரிப்பதற்கு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் செயற்பாடு.

ஆலையடிவேம்பு பிரதேச சபை கேட்போர் கூட மண்டபத்தில் இன்றைய தினம் (06) அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு நகர்ப்புற அபிவிருத்தித் திட்டத்தை (2026 – 2035) தயாரிப்பதற்கும், குறிப்பாக அதன் தொலைநோக்குப் பார்வையை வடிவமைப்பதற்கும் பொதுமக்களின் கருத்துக்களைச் சேகரிக்கும் முதற்கட்ட செயற்பாடு அம்பாறை மாவட்ட நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நடாத்தப்பட்டது.

நகரத்தின் நிலைப்பாடு, பங்கு, தனித்துவம், அத்தியாவசியப் பணிகள், அத்துடன் அதன் தற்போதைய பிரச்சனைகள் மற்றும் எதிர்கால ஆற்றல் போன்ற முக்கிய அம்சங்களை அறிந்து அபிவிருத்தித் திட்டத்தை தயாரிக்க இது உதவுகிறது.

இந்த நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் A.தர்மதாச, ஆலையடிவேம்பு பிரதேச சபை செயலாளர் S.திவாகரன், ஆலையடிவேம்பு பிரதேச சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கலந்துகொண்டவர்களிடம் இருந்து Google Forms படிவம் மூலமாக பிரதேச அபிவிருத்தி தொடர்பான விபரங்கள் ஆலோசனைகள் பெறப்பட்டது.

இந்த படிவத்தை பொதுமக்களும் பூர்த்தி செய்து நாங்கள் ஆலோசனைகளை வெளிப்படுத்தலாம்.

Google Forms இணைப்பு
https://docs.google.com/…/1FAIpQLSfDnrCkSw5PB6…/viewform

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker