
வீதி விபத்துக்களைத் தடுக்க போக்குவரத்து பொலிசாரால் நாடு முழுவதும் விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்று வருகின்றன,
அந்த வகையில் அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் பொலிஸ் பிரிவில் உள்ள வீதி போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், வீதி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் விழிப்புணர்வு நிகழ்வு அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி.நுவான் தந்தநாராயண தலைமையில் இன்றைய தினம் (31) ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது வீதி போக்குவரத்து தொடர்பான அடிப்படை விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது அத்துடன் இலங்கையில் பல பகுதிகளிலும் இடம் பெற்ற வீதி விபத்துக்கள் அதன் பாதிப்பு விதிமுறை மீறல்கள் என்பன காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது.



