ஆலையடிவேம்பு
அன்னை சாரதா அறநெறி பாடசாலையில் திருநாவுக்கரசு நாயனாரின் குரு பூஜை நிகழ்வு.

அக்கரைப்பற்று, அன்னை சாரதா அறநெறி பாடசாலையில் திருநாவுக்கரசு நாயனாரின் குரு பூஜை நிகழ்வு இன்றைய தினம் (17) அறநெறிப் பாடசாலை ஆசிரியகளின் ஏற்பாட்டில் வித்தியாலயத்தின் அதிபர் திருமதி T.குணரத்ன தலமையில் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வு ஆலையடிவேம்பு இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி.சர்மிளா பிரசாத், அக்கரைப்பற்று 07 ஆம் பிரிவு கிராம உத்தியோகத்தர் திருமதி.வினித்தா மற்றும் இந்துமாமன்றத்தின் சிரேஸ்ட உறுப்பினர் லோகநாதன் மற்றும் புண்ணியமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.



