ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கௌரவிப்பு நிகழ்வு……

ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மாதாந்த ஒன்று கூடலானது நேற்றைய தினம் (29) காரியாலய கேட்போர்கூடத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பறூஸா நக்பர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது இவ் முறை வெளிவந்த க.பொ.த உயர்தர பரீட்சை (2025) பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் மருத்துவ துறையில் முதல் நிலையை பெற்றவர் என மூவர் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
இன் நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.



