ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேச அறநெறிப் பாடசாலைகளுக்கான பாட நூல்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு….

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்து அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கான பாட நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஆவையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஒத்துழைப்புடன் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராமக்குட்டி தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் ஒருங்கினைப்பினை மாவட்ட செயலக இந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி மோற்கொண்டார்.

எற்பாடுகளை ஆலையடிவேம்பு இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி சர்மிளா பிரசாத் மேற்கொண்டதுடன். பாடசாலைகளுக்கான பாடநூல்கள், பாடசாலை வழிகாட்டி நூல், பாடசாலை பதிவேடு, ஆசிரியர் குறிப்பேடு, மாணவர் குறிப்பேடு, பஞ்சாங்க நாட்குறிப்பு என்பன இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

இதனால் பிரதேசத்தில் அறநெறி கல்வியினை இன்னும் மேன்படுத்த முடியும்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker