ஆலையடிவேம்பு

“100 கோடி பெண்களின் எழுச்சி” நிகழ்ச்சி திட்டம் அக்கரைப்பற்று பெண்கள் அரங்கத்தில்.

“100 கோடி பெண்களின் எழுச்சி” நிகழ்ச்சி திட்ட செயற்பாடு அக்கரைப்பற்று பெண்கள் அரங்கத்தின் உறுப்பினர்களுக்கு சென்றடையும் நிகழ்வு நேற்றய தினம் (11) மாலை 4.00 மணியளவில் அக்கரைப்பற்று பெண்கள் அரங்கத்தின் இணைப்பாளர் நடராஜா சுமந்தி தலையிலும் ஊழியர்களின் பங்களிப்புடனும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு Affected Women’s Forum நிறுவனம் மட்டக்களப்பு சமதை பெண்களின் வழிகாட்டலில் நடைபெற்றது.

“100 கோடி பெண்களின் எழுச்சி” (One Billion Rising – OBR) என்பது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்காக உலகளாவிய ரீதியில் நடத்தப்படும் ஒரு மிகப்பெரிய மக்கள் இயக்கமாகும்.

இதன் முக்கிய விபரங்கள் :
ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரப்படி, உலகில் மூன்றில் ஒரு பெண் (சுமார் 100 கோடி பெண்கள்) தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது பாலியல் வன்முறை அல்லது உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இந்த 100 கோடி பெண்களும் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்பதைக் குறிக்கவே “100 கோடி பெண்களின் எழுச்சி” எனப் பெயரிடப்பட்டது.

இதன் முக்கிய நோக்கமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளை (பாலியல் வன்கொடுமை, வீட்டு வன்முறை போன்றவை) முற்றாக நிறுத்துதல்.

​பாலின சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்ட உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
​வன்முறைக்கு எதிரான போராட்டத்தை ஒரு கொண்டாட்டமாக, குறிப்பாக நடனம் மற்றும் கலை வழியாக வெளிப்படுத்துதல்.

செயற்பாடுகளாக ​ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ம் தேதி (காதலர் தினம்) அன்று உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான நாடுகளில் ஆயிரக்கணக்கான போராட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.

​இந்த இயக்கத்தின் முக்கிய அடையாளமாக “நடனம்” (Dance) கருதப்படுகிறது. வன்முறை பெண்களின் உடலை முடக்க நினைக்கிறது, ஆனால் நடனம் அந்த உடலுக்கு சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்ற கருத்தின் அடிப்படையில் இது அமைகிறது.

இவ் ஆண்டுக்கான மையக்கருத்தாக ​ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட மையக்கருத்தி கலந்துரையாடியதனைத் தொடர்ந்து சிவபாக்கியம் பெண்கள் அரங்க நிருவாக உறுப்பினர் அவர்கள் 100கோடிபெண்கள் கூடி என்னும் தலைப்பில் கவிதையினை வாசித்தார் அதனை தொடர்ந்து 100கோடி பெண்களின் எழுச்சி பாடலுக்கு நடனமாடி நிகழ்வு நிறைவு பெற்றது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker