
வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சபைக்குள் வருகை
2026 நிதியாண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சபைக்கு சமர்ப்பிக்கின்றார்.
சபையில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் –
புதிய கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு சேவை வழங்கும் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்க 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்களுக்கு இலகு வட்டி அடிப்படையில் கடன் வழங்க 25 மில்லின் ரூபா ஒதுக்கீடு
விவசாயிகளுக்கு கடன் வழங்க 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
சகல தொழிற்றுறைகளிலும் கடன் பெற்றுக் கொள்ள 80 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு
சுற்றுலாத்துறையை மேம்படுத்த தெரிவு செய்யப்பட்ட சுற்றுலாத்துறை தலங்களை அபிவிருத்தி செய்ய 3500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
அப்புத்தளை பிரதேசத்தை பிரதான சுற்றுலாத்துறையாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
கொழும்பு பேர வாவியை தூய்மைப்படுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்த 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் ஆள் அடையாள அட்டை விநியோகிக்கப்படும்
அடுத்த ஆண்டு முதல் அரச நிறுவனங்களில் நிகழ்நிலை முறைமை ஊடாக கொடுக்கல் வாங்கலின் போது சேவைக் கட்டணம் அறவிடப்படாது. நிகழ்நிலை முறைமை கொடுக்கல் ,வாங்கல் கருத்திட்டத்துக்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்பில் AI திட்ட பயிற்சிக்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
அஸ்வெசும பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானமுடைய குடும்பத்தின் பிள்ளைகளுக்கு ப்ரோவ்ட் பேன்ட் பற்றுறுதிச்சீட்டு ( வவுச்சர் ) நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படும்
டிஜிட்டல் துறை ஆராய்ச்சியாளர்களுக்காக “அக்னி நிதியம் ” உருவாக்கப்படும். இதற்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
சிறைச்சாலைகளை மறுசீரமைக்க 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
விசேட தேவையுடையவர்களின் நலன்களுக்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
அரச சேவையின் ஆட்சேர்ப்பின் போது விசேட தேவையுடையோர் 3 சதவீதமளவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் .
ஓட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நலன் கருதி 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக அடுத்த ஆண்டும் 6000 ரூபா வழங்கப்படும்
விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாதாந்தம் 5000 ரூபா வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி, சிற்றுச்சாண்டிச்சாலை மற்றும் வளாக பொது சேவை அபிவிருத்திக்காக 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
அரச பல்கலைக்கழக மருத்துவ பீட அபிவிருத்திக்கு 11 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாபொல கொடுப்பனவு 5000 ரூபா, இதர கொடுப்பனவு 2500 ரூபா அதிகரிக்கப்படும்
ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு 2500 ரூபா அதிகரிப்பு
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ அறிக்கையின் பிரகாரம் மாதாந்தம் 10,000 ரூபா வழங்கப்படும்
பிரஜா சக்தித் திட்டம் ஊடாக சகல மாவட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு
பெருந்தோட்ட மக்களுக்கு உழைப்புக்கேற்ப ஊதியம் கிடைக்க வேண்டும் என்பது எமது கொள்கை
பெருந்தோட்ட மக்களுக்கு தற்போது வழங்கப்படும் 1350 ரூபா ,2026 ஜனவரி மாதம் முதல் 1550 ரூபா வரை அதிகரிக்க பரிந்துரை
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1550 மேலதிகமாக, அரசால் வருகை ஊக்குவிப்பு தொகையாக 200 ரூபா வழங்க பரிந்துரை
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1750 ரூபா சம்பளம் கிடைக்கப்பெறும்
பெருந்தோட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தம் 2041 ஆம் ஆண்டுக்கு பின்னர் நீட்டிக்கப்படமாட்டாது
கிராமிய வீதி அபிருத்திக்கு 24 ஆயிரம் மில்லியன் ரூபா, கிராமிய பாலம் அபிவிருத்திக்கு 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
மகளிர் வலுவூட்டலுக்கு 240 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
யானை – மனித மோதலுக்கு தீர்வு காணும் பொருட்டு வனவள திணைக்களத்துக்கு வாகனங்கள் கொள்வனவு செய்யவும்,மின்வேலி அமைக்கவும் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
வனவளத்துறை திணைக்களத்துக்கு நிரந்தர நியமனத்துக்கு அமைய 5000 பேரை இணைத்துக் கொள்ள தீர்மானம்
யானை – மனித மோதலுக்கு நிலையான தீர்வு காண 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
ஊடகவியலாளர்கள் உயர்கல்வி ,மற்றும் ஊடக தொழிற்றுறைக்குரிய உபகரணங்களை கொள்வனவு செய்ய கடன் வழங்கலுக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
சீன திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் தொடர்மாடி குடியிருப்புக்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும்
நெல்,வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு உட்பட அத்தியாவசிய பொருட்களை சதொச நிறுவனம் கொள்வனவு செய்து களஞ்சியம் செய்யும் கட்டமைப்பை உருவாக்க 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
தேசிய பாற்பண்ணை தொழிற்றுறையை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் முகமாக வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
மீனவர்களுக்கு உயிர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
மீன்பிடி தொழிலில் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி கருத்திட்டங்களை மீள ஆரம்பிக்க 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
மன்னார் மாவட்டத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்துக்கு தீர்வு காணும் வகையில் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
கிரான் பாலம், பொன்டுகால் பாலம் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
தூய்மையான குடி நீர்த் திட்டத்துக்கு 85,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
நீண்ட தூர பேருந்து சேவைக்கு புதிதாக 600 பேருந்துகளை சேவையில் இணைத்துக்கொள்ள 3,600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
புகையிரத சேவைக்கு நவீன புகையிரதங்களை கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு
வலுச்சக்தி துறையை வினைத்திறனாக்கும் வகையில் இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும்
வலுச்சக்தி்த் துறையை வினைத்திறனாக்கும் வகையில் “வலுச்சக்தி பரிவர்தனை” சட்டமூலம் அடுத்தாண்டு கொண்டு வரப்படும்
கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் 2026 முதல் காலாண்டில் செயற்படுத்தப்படும் .
திண்மக் கழிவகற்றலுக்கு 900 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
வீதி நாய்கள் பாதுகாப்பு மற்றும் வீட்டு நாய்கள் இறந்ததன் பின்னர் புதைத்தல், எரித்தலுக்காக பிலியந்தலை மற்றும் கெஸ்பேவ பகுதியில் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுக் கடன் வழங்க 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான தொடர்மாடி குடியிருப்பு நிர்மாணத்துக்காக 15 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
மலையக மக்களுக்கு இந்திய அரசின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ள குடியிருப்பு திட்டத்தைத் நிறைவு செய்ய 4290 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள 20 இலட்சம் ரூபா வழங்கப்படும்
2026 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் கடன் பெறும் எல்லை 60 மில்லியன் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது
2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட தரவுகள் முறையாக செயற்படுத்தப்படும்
அரச நிறுவனங்கள் தைரியமாக செயற்பட வேண்டும். தீர்மானிக்கப்பட்டதை போன்று நிதி ஒதுக்கப்படும்
சட்டத்துக்கமைய செயற்படுவதை எவ்வாறு சர்வாதிகாரம் என்று குறிப்பிடுவது -ஜனாதிபதி எதிர்க்கட்சிகளிடம் கேள்வி
மாகாண சபைத் தேர்தல் குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோர தீர்மானம்
மாகாண சபைத் தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது. தேர்தல் முறைமையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுங்கள்
மாகாண சபைத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
எதிர்க்கட்சித் தலைவர் ஊழல் மோசடியாளர்களுடன் ஒன்றிணையமாட்டார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் –



