ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப் பெருவிழாவின் ஏழாம் நாள் திருவிழா…

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கன சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது.
இதனைத்தொடர்ந்து நாளாந்தம் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது அந்த வகையில் இன்றைய தினம் (29.08.2020) ஏழாம் நாள் திருவிழா உபயகாரர் திரு க.தங்கவடிவேல் (NSB) குடும்பம் பங்களிப்புடன் , ஆலய தலைவர் ஜெகநாதன் மற்று ஆலய பரிபாலன சபையினர் தலைமையில் சிவ ஸ்ரீ.ஸ்கந்த.வரதேஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்று திருவிழா நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் சூழ சிறப்பாக இடம்பெற்று இரவு 11.00 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.