
முதல் பொலிஸ் நிலையம் 1866 செப்டம்பர் 3 அன்று நிறுவப்பட்டு, ஜி. டபிள்யூ. ஆர். கேம்பல் முதல் பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்தத் திகதி இலங்கை பொலிஸின் ஸ்தாபக நாளாகக் கருதப்படுகிறது.
இதனை நினைவுகூரும் வகையில், இன்று பொலிஸ் களப் படை தலைமையகத்தில் விசேட நினைவு விழா ஒன்று இடம்பெறவுள்ளது.
இதில் பொலிஸ் மரியாதை அணிவகுப்பு மற்றும் சேவையில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
விழாவிற்கு ஏற்பாடாக, கொழும்பு போக்குவரத்துப் பிரிவு விசேட போக்குவரத்துத் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதற்காக கொழும்பு போக்குவரத்துப் பிரிவு ஊடாக விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின்படி, பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள தும்முல்ல சந்தியிலிருந்து திம்பிரிகஸ்யாய சந்தி வரையிலான ஹெவ்லொக் வீதியில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளன:
பொலிஸ் களப் படைத் தலைமையகத்திற்கு எதிரே உள்ள கொழும்பு வெளியேறும் வீதியிலுள்ள பேருந்து நிறுத்தம், செப்டம்பர் 3, 2025 அன்று பிற்பகல் 2:30 முதல் மாலை 7:00 மணி வரை, ஹெவ்லொக் வீதி-பொன்சேகா வீதி சந்தியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படும்.
ஹெவ்லொக் வீதியில், தும்முல்ல சந்தியிலிருந்து திம்பிரிகஸ்யாய சந்தி வரை, கனரக வாகனப் போக்குவரத்து (கன்டெய்னர் வாகனங்கள் மற்றும் டிப்பர் லொறிகள்) செப்டம்பர் 3 ஆம் திகதி பிற்பகல் 2:00 முதல் மாலை 7:00 மணி வரை மட்டுப்படுத்தப்படும்.