அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் ஐந்தாம் நாள் பாற்குட பவணி…

செய்தி : ஹரிஷ்
படங்கள் :அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய முகப்புத்தகம்
அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா கடந்த சனிக்கிழமை (23.08.2019) அக்கரைப்பற்று செல்லப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து மங்கள வாத்தியங்களுடன் வீதி வழியாக திருக்கொடி கொண்டுவரப்பட்டு பூர்வாங்க கிரியைகளுடன் கும்பபூசை வசந்த மண்டபூசையுடன் சுபவேளையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பானமுறைல் திருவிழா நடைபெற்றுவருகின்றது.
அந்தவகையில் நேற்று (24.08.2019) புதன்கிழமை ஐந்தாம் நாள் திருவிழாவானது காலை 7.00 மணியளவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக மஹா கணபதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய பாற்குட பவணி மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்து அதனைத் தொடர்ந்து சஹஸ்ர (1008) சங்காபிஷேகமமும் சிறப்பாக நடைபெற்றது ஐந்தாம் நாள் காலை நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.