இலங்கைபிரதான செய்திகள்
Trending

பாடசாலைகளின் Big Match தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் பெரிய போட்டிகள் நடைபெறும் நிலையில், ஒழுக்கமும் பாதுகாப்பும் கடைபிடிக்குமாறு இலங்கை பொலிஸார் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர்.

மாணவர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் பெருமளவில் கலந்து கொள்ளும் இந்த போட்டிகளில், அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் அமைதிக்கேடு ஏற்படுத்துதல், எதிர்ப்பாடசாலைகளுடன் தகராறு செய்யுதல், அவதூறு அல்லது தூண்டுதல் உள்ளடக்கங்களை (சமூக ஊடகங்கள் உட்பட) பகிர்வு செய்வது போன்ற செயல்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் பாதுகாப்பற்ற பயண முறைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு அரங்குகளுக்குள் மதுபானங்கள், புகையிலைப் பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன. விதிமீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மாணவர்களை நெருக்கமாக கண்காணித்து, பாதுகாப்பான பயண ஏற்பாடுகளை உறுதிசெய்யுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker