
நாட்டில் சீரற்ற வானிலை அனர்த்தங்களில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627ஆக உயர்ந்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், 190 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேநேரத்தில், நாடு முழுவதும் 611,530 குடும்பங்களைச் சேர்ந்த 2,078,436 பேர் வெள்ளப் பாதிப்பு, மண்சரிவு முதலான அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 29,874 குடும்பங்களைச் சேர்ந்த 100,124 பேர் 990 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
4070 வீடுகள் முழுமையாகவும் சுமார் ஒரு இலட்சம் வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியதுடன், புதிய அபாயங்களைத் தவிர்க்க மக்கள் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


