ஆலையடிவேம்பு
அகில இலங்கை தமிழ் மொழித்தின ஆலையடிவேம்பு கோட்ட மட்ட போட்டி நிகழ்வு.

இவ் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழித் தின ஆலையடிவேம்பு கோட்ட மட்டபோட்டி நிகழ்வுகள் கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் (11) கோட்டக் கல்விப்பணிப்பாளர் சோ.செல்வம் தலைமையில் சிறப்பானாக இடம்பெற்றது.
பிரதம அதிதியாக திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார், சிறப்பு அதிதிகளாக ஆலையடிவேம்பு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
தொடக்க நிகழ்வு சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றதுடன் அதனை தொடர்ந்து மாணவர்களுக்கான போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் அதிதிகளால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.



