ஆலையடிவேம்பு
வெற்றிகரமாக இடம்பெற்ற (2025/2026) பல்கலைகழக அனுமதிக்காக விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு…
இம்முறை (2025/2026) பல்கலைகழக அனுமதிக்காக விண்ணப்பிக்க எதிர்பாத்துள்ள மாணவர்கள் தங்கள் கற்கை நெறிகளை எவ்வாறு தெரிவு செய்வது எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு இன்று(03) சனிக்கிழமை 3.00 மணியளவில் கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் ஆலையடிவேம்பு இணையக்குழுவின் (Alayadivembuweb.lk) ஏற்பாட்டில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
வளவாளர்களாக திருக்கோவில் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் ந.சுதாகரன் மற்றும் கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய அதிபர் த.இராசநாதன் ஆகியோர் சமூக நோக்குடன் கலந்து கொண்டு திறன்பட பல தெளிவூட்டல்களுடன் வழிகாட்டல் கருத்தரங்கு இடம்பெற்றது.



