ஆலையடிவேம்பு
கோளாவில் அம்பாள் பாலர் பாடசாலை மாணவர்களின் சித்திரைப் புத்தாண்டு விழா…..

அக்கரைப்பற்று மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற கோளாவில் அம்பாள் பாலர் பாடசாலை மாணவர்களின் சித்திரைப் புத்தாண்டு விழா இன்று (13) காலை 10.00 மணியளவில் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இப்புத்தாண்டு விழா நிகழ்வில் அதிதிகளாக பாலர் பாடசாலை மற்றும் முன்பள்ளி அபிவிருத்திப் பிரிவில் உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ். விவேகானந்தராஜா மற்றும் பாலர் பாடசாலைகளின் வெளிக்கள உத்தியோகத்தர் p.மோகனதாஸ் ஆகியவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.



