இலங்கைபிரதான செய்திகள்
Trending

ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி (Syed Mohsin Raza Naqvi), வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டு மத்திய அமைச்சர் சௌத்ரி சாலிக் ஹுசைன் (Chaudhry Salik Hussain) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரை, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இலங்கை விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் உறுதிப்படுத்துவதை ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியதுடன், கடந்த காலங்களில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளி உள்ளிட்ட இலங்கை மக்கள் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொண்ட போதெல்லாம் பாகிஸ்தான் வழங்கிய இதயபூர்வமான ஆதரவிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

மேலும் போட்டியில் பங்கேற்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவிய நேரத்தில் இலங்கை அரசாங்கம் தலையிட்டதற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்பாக இலங்கை அரசாங்கத்திற்கு விசேட நன்றிகளைத் தெரிவித்த தூதுக்குழுவினர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உள்ளிட்ட அனைவருக்கும் இலங்கையில் வழங்கப்பட்ட விருந்தோம்பலையும் இலங்கை மக்களின் நட்புறவான வரவேற்பையும் பாராட்டியிருந்தனர்.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker