ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தேசிய இளைஞர் பரிமாற்றத் திட்டத்தின் தொடக்க விழா…!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் தேசிய இளைஞர் பரிமாற்று வேலைத் திட்டம் தொடர்பான ஆரம்ப நிகழ்வு (05) ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம், அண்ணா இளைஞர் கழகம் கோலவில்-03 மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினர் மேற்கொண்டு இருந்தனர்.
இவ் இளைஞர் பரிமாற்று வேலைத் திட்டமானது எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளது.
இதில் மாத்தளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட சகோதர மொழி பேசும் இளைஞர் யுவதிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் பேசும் மக்களுக்கும் சகோதர மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு சக வாழ்வு நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் ஒரு திட்டமாக காணப்படுகிறது.



