ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர் ஏற்பாட்டில் 35வது பிரதேச விளையாட்டு விழா -2025

தேசிய இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் பெருமையுடன் ஏற்பாடு செய்த 35 ஆவது பிரதேச விளையாட்டு விழா இன்றைய தினம் (05) புதன்கிழமை காலை 10.30 மணியளவில் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் தலைவர் P. மிருஜன் தலைமையிலும் இளைஞர் சேவை அதிகாரி ஜெயராஜ் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்ற நிகழ்வில்.
பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கௌரவ அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் ஆ.தர்மதாச உதவிப்பணிப்பாளர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் கங்கா சாகரிக, உதவிப்பணிப்பாளர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் AL முபாறக் அலி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஸ்ரீவர்த்தன விசேட அதிதிகளாக கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதனில் இளைஞர் கழக வீர, வீராங்கனைகளுக்கு சுவட்டு நிகழ்ச்சிகளில் இடம்பெற்றதுடன் அதனில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றி கிண்ணங்கள் என்பன அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.
வழங்கப்பட்ட வெற்றிக்கிண்ணங்களுக்கான அனுசரணையினை ஆலையடிவேம்பு பிரதேச தேசிய மக்கள் சக்தி கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள் வழங்கி இருந்தார்கள்.



