SRK விஞ்ஞான கழகம் நடாத்திய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா- 2024

அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 02/04/2024 இன்றையதினம் ‘இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா’ விஞ்ஞான ஆய்வு கூடத்தில் பாடசாலை பதில் அதிபர் திரு.K.ஜயந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மாணவர்கள் தங்களது ஆக்க பூர்வமான புத்தாக்க கண்டு பிடிப்புங்களை காட்சிப்படுத்திருந்தனர்.
மேலும் இன் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.K. கமலமோகனதாசன், Dr. திருமதி.சி. குணாளினி- MO (பிரதேச வைத்திய சாலை பனங்காடு) ஆகியோர் சிறப்பு அதிதியாகவும் மற்றும் அதிதிகளாக ஆலையடி வேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி.M. மயூரன், திருமதி. R. ஜயானந்தமூர்த்தி- ISA (விஞ்ஞானம்) திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகம், திருமதி. A. பவானந்தன் (விஞ்ஞான பாட இணைப்பாளர் திருக்கோவில் கல்வி வலயம்) கலந்து கொண்டிருந்தனர்.
அதிதிகள் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டதுடன், மாணவர்களுக்கான புள்ளிகள் இடப்பட்டு சிறந்த படைப்புகளுக்கு பதக்கங்களும், பங்கு பற்றிய அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.