ஆலையடிவேம்பு
NAFSO-கிழக்கு சூரியன் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மற்றும் கௌரவிப்பு விழா

சர்வதேச மகளிர் தின நிகழ்வு மற்றும் கௌரவிப்பு விழா நிகழ்வு NAFSO-கிழக்கு சூரியன் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கண்ணகி கிராம சுகாதார நிலையத்தில் இன்றைய தினம் (15) நண்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் போது “பெண்களின் வலிமை, துணிவு மற்றும் சாதனைகளை கொண்டாடுவோம்” எனும் அம்சங்களுக்கு அமைவாக திருமதி.சுமதி சிவநாயகம் (குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்), திருமதி.சிபாஜினி கோபிநாத் (இனைப்பாளர் லக்ஸ்மி கரங்கள் அமைப்பு), திருமதி.நிசாகரி பிரதீபன் (அம்பாரை மாவட்ட பெண்கள் வலையமைப்பு) மற்றும் திருமதி.நடராசா விஜயலெட்சுமி (சமூர்த்தி உத்தியோகத்தர்) ஆகியவர்களுக்கு சேவை நலன் பாராட்டு என்பனவும் இடம்பெற்றது.



