ஆலையடிவேம்பு
அறநெறி ஆசிரியர்களுக்கான நிவாரணப்பொதிகள் அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் நிருவாகத்தினர் வழங்கி வைத்தனர்.

வி.சுகிர்தகுமார்
கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இப்பணிகளில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களும் இணைந்து செயலாற்றி வருகின்றன.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட அறநெறி ஆசிரியர்களுக்கான நிவாரணப்பொதிகளை அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தினர் நிருவாகத்தினர் வழங்கி வைத்தனர்.
ஆலய தலைவர் க.கார்த்திகேசு தலைமையில் இடம்பெற்ற நிவாரணப்பணியில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
நிகழ்வில் ஆலய பொருளாளர் கே.பி.ராஜஸ்ரீ அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் க.ஜெயராஜ் மற்றும் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் நிசாந்தினி தேவராஜ் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற தலைவர் த.கயிலாயபிள்ளை மற்றும் மழவராயன் குடி உறுப்பினர் சீ.செல்வராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தனர்.


