Galaxy SmartTag மற்றும் SmartTag+ உங்களுக்கு மிகவும் முக்கியமான விடயங்களைப் பாதுகாத்திடும்

நினைவு மற்றும் அதை தக்கவைக்கும் திறன் தொடர்பாக நடாத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி நீங்கள் ஒரு பொருளை எங்காவது வைத்தவுடன் 20 நிமிடங்களுக்கு பிறகு அந்த நினைவில் 58% இனை மட்டுமே நீங்கள் நினைவு வைத்திருப்பீர்கள். காலப்போக்கில் அதுவும் குறைந்து போகிறது. இந்த ஆய்வு SmartThings Find சேவையின் ஒரு பகுதியாக 2021இல் Galaxy SmartTag இனை அறிமுகப்படுத்த Samsung Electronicsக்கு ஊக்கமளித்தது.
ஒரு பயனர் தமது Galaxy SmartTag இனை தமது smartphone உடன் இணைத்தவுடன் அதன் இருப்பிடத்தை ஸ்மார்ட் ஃபோன்களில் கண்காணிக்க முடியும். Samsung அறிமுகப்படுத்திய இந்த Galaxy SmartTag+ ஆனது ultra-wideband (UWB)தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருப்பிடங்களைத் துல்லியமாக குறிக்க உதவுகிறது.
சாத்தியமான பல்வேறு வகையான பயன்பாடுகள்
Galaxy SmartTag கைக்கடக்கமாக வரும் சில சாத்தியமான சந்தர்ப்பங்களை ஹன்ஜூன் ரியூ அறிமுகப்படுத்தினார். “மருத்துவமனைகளில் அசையும் கருவிகளின் வரம்புகள் உள்ளன, அவை பயன்பாட்டிற்கு பிறகு அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட வேண்டும். அவற்றை சரியான இடத்தில் வைக்கப்படாவிட்டால், அவசர சிகிச்சை நேரங்களில் மோசமான நிலைமையை அது ஏற்படுத்தும். இது போன்ற உபகரணங்களில் புயடயஒல ளுஅயசவவுயப இனை இணைப்பது மற்றும் குறிப்பிட்ட இடங்களில் மீண்டும் வைக்கப்படவேண்டிய பொருட்கள் சரியான இடத்தில் வைக்கப்படாமல் தொலைந்து போவதைத் தடுப்பதுடன் நிறைய நேரத்தினை மிச்சப்படுத்தவும் உதவுகிறது என Samsung Electonics Mobile Communications Business இன் Smartthings Stratgy Group இன் ஹன்ஜூன் ரியூ தெரிவித்தார்.
அதிக துல்லியமான கண்காணிப்பு, அதிகமான தூரத்திலும்.
Samsung ஆனது Bluetooth Low Energy (BLE) தொழில்நுட்பத்தினை பயன்படுத்துகிறது. இதனால் பயனர்கள் தங்கள் மொபைல் சாதனத்தைப் பயன்படுத்தி Galaxy SmartTags இணைக்கப்பட்டுள்ள பொருட்களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.
பயனர்கள் தங்கள் சாதனங்களுக்கு மிகவும் அருகில் இருந்திடும் போது அவர்களது கண்ணுக்கு எட்டாத பொருளை எளிதாகக் கண்டுபிடிப்பதற்காக Galaxy SmartTag ஒலியினை வெளியிடச் செய்யும் ‘Ring’ பொத்தானை அழுத்தலாம்.” என ஜிமோ பார்க் விவரித்தார்.
Galaxy SmartTag ஆனது “Offline finding” அம்சத்தினைக் கொண்டுள்ளது. இது பயனர்களுக்கு தங்கள் தொலைந்த பொருளை கண்டுபிடித்துக் கொடுக்க ஏனைய Galaxy smartphones மற்றும் tabletகளின் உதவியை நாடுகிறது. “Offline finding” இனைக் கொண்ட பயனர் ஒருவர் Galaxy SmartTag வழியாகச் சென்றால், BLE சமிக்ஞை கண்டறியப்பட்டு, அதன் இருப்பிடத்தகவல் SmartThings serverக்கு அனுப்பப்படும். பின்னர் அது பயனர்களின் ஸ்மார்ட் ஃபோனுக்கு அனுப்பப்படும்.
Galaxy SmartTag ஆனது “Private ID” எனும் தமது தனியுரிம தொழில்நுட்பமான மிகவும் உறுதியான பாதுகாப்பு அம்சத்தினைக் கொண்டுள்ளது. மறைகுறியாக்கப்பட்ட இந்த Private ID செயற்பாடு BLE சமிக்ஞை தவறாகப் பயன்படுவதைத் தடுக்க ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் சாதனத்தின் IDயினை மாற்றிட வடிவமைக்கப்பட்டுள்ளது.
Galaxy SmartTag+ ஆனது மிகவும் துல்லியமான இருப்பிட திறன்களை வழங்கிட UWB தொழில்நுட்பத்தினை பயன்படுத்துகிறது. பயனர்கள் தொலைந்து போன பொருட்களை நிகழ்நேரத்தில் பெரிதாக்கப்பட்ட augmented reality (AR) மேலடுக்கு மூலம் கண்டறிந்து கொள்ளக்கூடியதுடன் சென்றிமீட்டர் வரையிலான தகவல்களை துல்லியமாகப் பெற்றிடவும் முடியும்.
Galaxy SmartTag மற்றும் SmartTag+ மூலம் பயனர்கள் இழந்த பொருட்களைக் கண்டுபிடித்து அவர்களின் மிக மதிப்புமிக்க உடைமைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு இருப்பதையறிந்து மனஅமைதி அளிக்க இது உதவிடும் என நாம் நம்புகிறேன் என ரியூ தெரிவித்தார்.