கிழக்கு மாகாண KORFBALL அபிவிருத்தி முகாமையாளராக இயன் மருத்துவர் ஹரன்ராஜ் தெரிவு….

இயன் மருத்துவராக அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் கடமை புரியும் கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ் தேசிய Korfball சம்மேளனத்தினால் கிழக்கு மாகாண Korfball அபிவிருத்தி முகாமையாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் கடந்த 2016ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆசிய korfball கிண்ணத்தில் இயன் மருத்துவராகக் பங்குபற்றிய இயன் மருத்துவர் ஹரன்ராஜ் அவர்களிடம் இந்த கிழக்கு மாகாண Korfball அபிவிருத்தி முகாமையாளர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இருந்து பல தேசிய வீரர்களை விளையாட்டின் உருவாக்க முடியும் என ஹரன்ராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.
உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற Korfball விளையாட்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்பொழுது நாட்டின் பல பாகங்களிலும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.
அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்திலும் இவ்விளையாட்டை அறிமுகம் செய்து தேசிய மட்டத்தில் பல விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் மட்டும் பயிற்றுவிப்பாளர்கள் உருவாக்குவதற்கான முயற்சிகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.
அதன் அடிப்படையில் இலங்கை Korfball சம்மேளனத்தினால் கிழக்கு மாகாணத்தில் Korfball விளையாட்டை அறிமுகம் செய்து பல தேசிய வீர வீராங்கனைகளை உருவாக்குவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.
அத்துடன் அகில இலங்கை korfball சம்மேளனத்தில் உள்ள ஒரே ஒரு தமிழர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.