
2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதிக்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) உறுப்பினர் கணக்குகளின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர் கணக்குகளின் அறிக்கை ஏற்கனவே நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி உறுப்பினர்கள், நிர்வாக தலைவர்களிடம் தங்களது புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை பெறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
உறுப்பினர்களின் பெயர்கள், தேசிய அடையாள அட்டை எண்கள் (NIC) மற்றும் கணக்கு அறிக்கைகளில் வரவு வைக்கப்பட்டுள்ள பங்களிப்புத் தொகை தொடர்பான முறைப்பாடுகள் குறித்து 0112-206690 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.