ஆலையடிவேம்பு
அகில இலங்கை தமிழ் மொழித்தின ஆலையடிவேம்பு கோட்ட மட்ட எழுத்தாக்க போட்டிகள் இன்று ஆரம்பம்…

அகில இலங்கை தமிழ் மொழித்தின ஆலையடிவேம்பு கோட்ட மட்ட எழுத்தாக்க போட்டிகள் இன்றைய தினம் (05.06.2024) அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுகள் கோட்டக் கல்விப்பணிப்பாளர் க.கமலமோகனதாசன் தலைமையிலும் ஆரம்பமான போட்டிள் திருக்கோவில் வலய தமிழ்மொழி மூல பாட வளவாளர் குலேந்திரன் மற்றும் ஆலையடிவேம்பு கோட்ட தமிழ் மொழி தின குழுச்செயலாளர் றேகன் ஆகியோரின் ஒழுங்கமைப்பினும் இடம்பெற்றது .
குறித்த போட்டிகளில் ஆலையடிவேம்பு கோட்ட பாடசாலை மாணவர்கள் பங்கேற்றிருந்ததுடன் இரண்டாம் கட்ட போட்டிகள் எதிர் வரும் 19 ஆம் திகதி அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.