AUSKAR – அவுஸ்ரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் காரைதீவு மீனவர் சங்க உறுப்பினர்களின் 18 பிள்ளைகளிற்கு கற்றல் உபகரணங்கள் கொள்வனவுக்கு 4000/- பெறுமதியான வவுச்சர்கள் வழங்கிவைப்பு.

அவுஸ்ரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் மட்டுப்படுத்தப்பட்ட காரைதீவு விநாயகர் மீனவர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளில் கல்வி கற்கும் மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் கொள்வனவுக்காக 4000.00 பெறுமதியான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு சங்கத்தின் செயலாளர் திரு.ர.சுஜீதன் தலைமையில் இடம்பெற்றது.
இவ் நிகழ்விற்கு அதிதிகளாக அவுஸ்ரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தின் உபதலைவர் அரசரெட்ணம் மகேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விசேட அதிதியாக அவுஸ்ரேலிய காரைதீவு மக்கள் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினரான தம்பியப்பா கணேசநாதன் அவர்களும், காரைதீவு செயற்பாட்டு குழு உறுப்பினர்களான திரு.ரெட்ணகுமார் அவர்களும், திரு.பிரேமானாந்தா அவர்களும் அதிதிகளாக கலந்து கொண்டனர். சிறப்பு அதிதியாக கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.குமுதினி ஜெகதீசன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் கற்றல் உபகரணங்களிற்கான வவுச்சர்களை பெற்று கொள்ளும் மாணவர்கள் உட்பட மீனவர் சங்க நிர்வாக சபை உறுப்பினர்களோடு ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மேற்படி உதவியினை வழங்க நிதி உதவி வழங்கிய காரைதீவினை பிறப்பிடமாகவும் அவுஸ்ரேலியாவினை வசிப்பிடமாகவும் கொண்ட திருவாளர்.Eng.வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்களிற்கும் அவரது குடும்பத்தினரிற்கும் விசேட நன்றிகளை தெரிவிப்பதுடன்.
குறித்த உதவி செயற்பாட்டிற்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் காரைதீவு மட்டுப்படுத்தப்பட்ட விநாயகர் மீனவர் கூட்டுறவுச்சங்கத்தினர் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறார்கள்.



