இலங்கை
பத்தனை – மூங்கில் கொட்டகலை தோட்டத்தில் குளவிக் கொட்டு…. 10 பெண்கள் வைத்தியசாலையில்

பத்தனை – மூங்கில் கொட்டகலை தோட்டத்தில் 10 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று நண்பகல் 12.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளவிக் கொட்டுக்கு இலக்காகியவர்கள் 09 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி சாவித்திரி ரவிவர்மா குறிப்பிட்டார்.
அவர்களில் ஒருவருக்கு மாத்திரமே அதிகக் குளவிகள் கொட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மூங்கில் கொட்டகலை தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.