தொழில்நுட்பம்

100 கி.மீ. வேகத்தில் 150 கி.மீ. செல்லுங்கள் ! ஒகி 100 எலக்ட்ரிக் பைக் ! பெட்ரோல் பைக்கிற்கு பை பை !

ஜப்பானை சேர்ந்த ஒகினவா நிறுவனம் இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
மின்சார ஸ்கூட்டர்களை தயாரித்து வரும் ஒகினவா நிறுவனம் தற்போது பைக்கும் தயாரிக்க முடிவுகள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

okinawa bike

புதிய மோட்டார் பைக்கில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். இந்த வாகனத்திற்கு பெயர் ஸ்கேல் என்ற இந்த மாடலுக்கு ஒகி 100 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

okinawa bike

பார்ப்பதற்கு அசல் பெட்ரோல் வாகனம் போலவே இந்த பைக் இருக்கும். முற்றிலும் வித்தியாசமான டிசைனில் புதிய லுக்கோடு இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் எல்இடி மின் விளக்குகள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் காணப்படுகின்றது. இந்த பைக் மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தில் செல்லும். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய வெறும் 2 மணி நேரம் போதுமானது.

okinawa bike

இந்த மின்சார பைக் இந்தியாவில் அதிகபட்சம் ரூ. 1 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக்கை காட்சிப்படுத்தி 24 மாதங்களுக்கும் அதிகமாகிவிட்டநிலையில், நடப்பாண்டில் இந்த பைக் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் பரவி உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker