இலங்கை
ஐந்து தமிழ் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு – விக்கி, சுரேஷ் புறக்கணிப்பு!

வடக்கு கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் ஐந்து தமிழ் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பில் கலந்துகொள்ள சி.வி.விக்னேஷ்வரன், சுரஷ் பிரேமசந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக ஐந்து தமிழ் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாக உள்ள நிலையிலேயே இந்த தகவல் கிடைத்துள்ளது.
பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் பொது இணக்கப்பாட்டிற்கு சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கட்சிகளும் இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.