உலகம்தொழில்நுட்பம்

சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்!

மெட்டா நிறுவனம் தனது அண்மைய ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

இதனால், அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 10 சதவீதம், அதாவது ஏறத்தாழ 8,000 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இது தொடர்பில் அந்நிறுவனம் ஊழியர்களுக்குத் தகவல் தெரிவிக்கத் தொடங்கியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதன் சிங்கப்பூர் குழுக்கள்தான் இந்தச் செய்தியை முதலில் பெற்றுள்ளன.

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி,

மெட்டா நிறுவனம் தனது சிங்கப்பூர் மையத்தில் உள்ள பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு இது தொடர்பான மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளது.

மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான இந்நிறுவனம் இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவில் பில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பணி இடமாற்றங்கள் மற்றும் ஆட்குறைப்புகளுக்கு முன்பு, மெட்டா நிறுவனத்தில் உலகளவில் சுமார் 78,000 பணியாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker