ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு 7/4 பகுதி சக்தி மகளிர் சங்கத்தினரால் பிரதேச சபை உறுப்பினர் கதிகரன் மற்றும் சாந்தி கௌரவிப்பு….

ஆலையடிவேம்பு 7/4 பகுதி சக்தி மகளிர் சங்கத்தினரால் அக்கரைப்பற்று D வட்டாரத்தில் இருந்து பிரதேச சபை உறுப்பினர்களாக தெரிவாயிருக்கும் பா.கதிகரன் (சீனு) மற்றும் பொ.சாந்தி ஆகியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றய தினம் (01) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஆலையடிவேம்புக்கான கள உத்தியோகத்தர் T.நிஷாகரி ஆலையடிவேம்பு – 7/4 பிரிவின் சிவில் பாதுகாப்பு தலைவர் S.கார்த்திகேசன் மற்றும் சக்தி மகளிர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



