ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு….

அக்கரைப்பற்று திகோ /ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரிதேசிய பாடசாலையின் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (07) பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வில் திருக்கோவில் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளருமான கே.கமலமோகனதாசன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் சிறப்பு அதிதியாக பாடசாலையின் பிரதி அதிபர்களான திரு.க.ஐயந்தன், திரு.R.சதிஸ், திரு.கே.மகேஸ்வரன் உதவி அதிபர் திருமதி.தேவராஐன் மற்றும் ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் பிரதி அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்ற C.மதியழகன் ஆகியோரும்
பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் சொ.பி.அகிலன் பழைய மாணவர் சங்க உறுப்பினர் திருமதி. வி.விஸ்வானந்தி ஆசிரியர்கள் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இன் நிகழ்வினை திருமதி.நீரஜா அகிலன், திருமதி ம. ஜீவிதா பொறுப்பாசிரியர்கள் ஒழுங்கு படுத்தலின் கீழ் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது



