
இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதனை நினைவுகூரும் முகமாக ஞாபகார்த்த 2 ஆயிரம் ரூபா நாணயத்தாள் சுற்றோட்டத்திற்கு விடப்படுவது பற்றிய பொதுமக்களுக்கான விழிப்புணர்வு குறித்த அறிக்கையொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை மத்திய வங்கி அதன் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி அன்று 2000 ரூபா சுற்றோட்டத்திற்கு விடப்படும் நாணயத்தாளை வெளியிட்டுள்ளது.
புதிய நாணயத்தாளை தங்குதடையின்றி ஏற்றுக்கொள்வதையும் விநியோகிப்பதையும் வசதிப்படுத்தும் பொருட்டு, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் அவற்றின் பணம் கையாளும் இயந்திரங்களை அளவமைக்கும் செயன்முறையை முன்னெடுக்கின்றன.
இச் செயன்முறையின் முன்னேற்றத்திற்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் ஊடாக படிப்படையாக சுற்றோட்டத்திற்கு விடப்படும்.
மாறுதலடைகின்ற இக்காலப்பகுதியில் பொதுமக்களின் உத்துழைப்பை இலங்கை மத்திய வங்கி மெச்சுவதுடன் அளவமைக்கும் செயன்முறை நிறைவடைந்தவுடன் புதிய நாணயத்தாள் அனைத்து வங்கிகள் மூலமும் தங்குதடையின்றிப் பயன்படுத்தப்படுமெனவும் உறுதியளிக்கின்றது.
இது குறித்த விபரங்களை அறிந்துகொள்ள, நாயணத்திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறும், மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கோ அல்லது மத்திய வங்கியின் சமூக ஊடகத்தளங்களை பின்தொடருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.