குளிர்ந்த போத்தல் நீரை அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை (CAA) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
குறிப்பாக சுற்றுலா அதிகாரசபை அனுமதி அல்லது ஏனைய நிறுவன அனுமதிப்பத்திரங்களின் கீழ் செயல்படும் சில வணிகங்கள், குறிக்கப்பட்டுள்ள தொகையை விட அதிகமான விலையில் குளிர்ந்த போத்தல் நீரை விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் சுட்டிக் காட்டினார்.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட உச்சபட்ச சில்லறை விலையை விட அதிகமாக போத்தலில் அடைக்கப்பட்ட நீரை விற்க எந்த நிறுவனத்திற்கும் சட்டபூர்வமான அனுமதி இல்லையென தெளிவுபடுத்திய அவர், குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதன் மூலமாகவோ அல்லது பிரபல வர்த்தகநாமம் என்பதனாலோ அவ்வாறு மேற்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.
அவ்வாறான நடைமுறை சட்டவிரோதமானது என குறிப்பிட்ட ஹேமரந்த சமரகோன் குறிப்பிட்டார். அனுமதிக்கப்பட்ட விலையை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அனைத்து விற்பனையாளர்களிடமும் தாம் கோருவதாக குறிப்பிட்ட அவர், குளிர்விக்கப்பட்ட அல்லது வெவ்வேறு வர்த்தகநாமத்தின் அடிப்படையில், அதிக விலையில் போத்தலில் அடைக்கப்பட்ட நீரை விற்பனை செய்வது பாவனையாளர்களை பாதுகாக்கும் சட்டங்களை மீறுவதாகும் என அவர் தெரிவித்தார்.
குறித்த விடயங்களை இணங்கத் தவறும் விற்பனையாளர்கள் மிது, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எவ்வித பாரபட்சமுமின்றி சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என அவர் குறிப்பிட்டார்