ஆலையடிவேம்புபிரதான செய்திகள்
Trending
ஆலையடிவேம்பு பிரதேச சபையினர் அறிவுறுத்தல்: மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பிரதான வீதிகளில் பொது போக்குவரத்துக்கு இடையூறு செய்து விபத்துக்களை ஏற்படுத்தும் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களின் உரிமையாளர்கள் மாடுகள் மற்றும் நாய்களை தங்களது பராமரிப்பில் வைத்து பராமரிப்பில் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதோடு மீறுவோருக்கு எதிராக இனி வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆலையடிவேம்பு பிரதேச சபையினரால் அறிவுறுத்தல்.
அத்தோடு ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கட்டப்பட்டு வரும் மதில்கள் மற்றும் வீடுகள், கட்டங்கள் என்பவற்றை உரிய முறையில் பிரதேச சபையின் அனுமதியுடன் அமைத்துக்கொள்ளுதல் தொடர்பிலும் இன்றைய தினம் முக்கிய வீதிகளில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது.