இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் கொடியேற்றம் இன்று ஏராளமான மக்கள் கூட்டத்துடன் ஆரம்பம் ஆகியது.
நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையானது செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி நேற்றும் விஷேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.
அதாவது, சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற இந்த பூஜையில் கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டு ஆலயத்தை சென்றடைந்தது.