அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் நடாத்தும் ”YMHA Premier League Season 03” கிரிக்கெட்சுற்றுப் போட்டி இன்று கோலாகலமாக ஆரம்பம்….

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் ”YMHA Premier League Season 03” (பிரிமியர் லீக் சீசன் 03) கிரிக்கட் சுற்றுத்தொடர் 08 அணிகள் கொண்டதாக இன்றைய தினம் (12) காலை 9.00 மணியளவில் அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகி கிரிக்கெட் சுற்றுத்தொடர் இடம்பெற்று வருகிறது.
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் A.தர்மதாச, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் R.திரவியராஜ், கிரிக்கட் சுற்றுத்தொடரின் பிரதான அனுசரணையாளரான திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் S.சசிகுமார் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய சிவில் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி K.P.W.அனுர ஆகியவர்கள் அதிதிகளாகவும் மேலும் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் சிரேஷ்ட மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்….