உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய தீர்த்தோற்சவத்தை மையமாக கொண்டு அக்கரைப்பற்றில் இருந்து உகந்தை மலை முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை….

உகந்தை மலை ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் இடம்பெறுகின்ற ஆடிவேல் மகோற்சவத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் அக்கரைப்பற்றில் இருந்து உகந்தை மலை முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்ல ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் இவ் புனித யாத்திரை ஆலய தீர்த்தோற்சவத்தை மையமாக கொண்டு 26/07/2023 புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ வினேஸ்வரர் ஆலயத்தில் இருந்து யாத்திரை ஆரம்பமாகும்.
அதன் வகையில் யாத்திரையின் போது இரவில் தங்குமிடங்கள் பின்வருமாறு
2023/07/26
திருக்கோவில் மாணிக்க பிள்ளையார் ஆலயம்
2023/07/27
சங்கமன்கண்டி வீதி பிள்ளையார் ஆலயம்
2023/07/28
கோமாரி முருகன் ஆலயம்
2023/07/29
பொத்துவில் குண்டுமடு விக்னேஸ்வரர் ஆலயம்
2023/07/30
பாணம சித்தி விநாயகர் ஆலயம்
2023/07/31
உகந்தை மலை முருகன் ஆலயம்
இதன் அடிப்படையில் மேலே குறிப்பிட்ட ஆலயங்களில் இரவுப் பொழுதில் சபையினரால் விசேட கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெறும்.
யாத்திரையின் போது காவி உடை அணிந்து நந்தி கொடி மற்றும் சேவல் கொடி ஏந்தி பஜனை பாடல்கள் பாடப்பட்டு பக்தி பூர்வமாக செல்லப்படும்.
இவ் யாத்திரையில் பங்குகொள்ள விரும்பும் அடியார்கள் உங்கள் பெயர் விபரங்களை எமது சபையின் செயலாளரிடம் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
தொடர்புகளுக்கு சௌ.மிதுர்ஷன் செயலாளர் 0775004708.