ஆலயடிவேம்பு பிரதேச செயலகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு….

ஆலயடிவேம்பு பிரதேச செயலகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு.வி. பபாகரன் ஐயா அவர்களின் தலைமையில் இன்று(2023.01.02) பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், மேலதிக மாவட்ட பதிவாளர், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் , நிருவாக கிராம அலுவலகர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக பிரதேச செயலாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அத்துடன், ஒரு நிமிட இறை வணக்கத்துடன் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூரும் முகமாக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அடுத்த நிகழ்வாக, நிருவாக உத்தியோகத்தர் அவர்களால் 2023 ஆம் ஆண்டுக்கான உறுதிமொழி வாசிக்கப்பட்டதுடன், உத்தியோகத்தர்களின் சத்திய பிரமாணமும் இடம்பெற்றது.
நிறைவாக, பிரதேச செயலாளர் அவர்களின் உரை இடம்பெற்றதுடன், மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து சம்பளம் பெறும் ஒவ்வொரு உத்தியோகத்தர்களும் மிகவும் சிறப்பான முறையில் வினைத்திறனாகவும், விளைதிறனாகவும் செயல்படுவதன் மூலமே மக்களுடைய தேவைகளையும் நிறுவன நோக்கத்தினையும் சிறப்பான முறையில் நிறைவேற்ற முடியும். என்ற அடிப்படையில் தனது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன் வைத்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் சிறப்பாக கடமையாற்றியமைக்காக அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றியை தெரிவித்ததார்.
அத்துடன் 2023 ஆம் ஆண்டில் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துடன் நிகழ்வானது இனிதே நிறைவு பெற்றது.
பிரதி- Divisional Secretariat, Alayadivembu முகப்புத்தக தளம்